Home Movie Reviewதமிழ்ப்படம் - விமர்சனம்
Illinois Institute Of Technology
  

தமிழ்ப்படம் - விமர்சனம்

Jan 31,2010

ஒரே ஒரு ஊர்ல ஒரு அசட்டு பாட்டி தன் மொக்க பேரன் ஷிவாவை முழு ஆக் ஷன் ஹீரோவாக நாட்டில் நடமாட விட்டால் என்னவெல்லாம் நடக்கும் என்பதே இந்த தமிழ்ப்படத்தின் Premise குறும்பு,அக்குறும்பு இப்படி எல்லாத்தையும் கலந்தாச்சு திரைக்கதையில் தமிழ் சினிமாவுக்கே உரிய கிரியேடிவிட்டி,ஸ்டார் I Con களை அடி பின்னி காமெடி கலாட்டா பண்ணியிருக்கிறார்கள்.தமிழ் சினிமாவை மனதார காதலிக்கிற ஜீவாத்மாக்கள் கூட கபகபன்னு சிரிச்சு வைக்கும் படியாக இதை சொல்லியிருக்கிறார்கள்.Satirical imitation from nostalgia

கலாச்சாரத்தை காப்பாத்தற கதாநாயகியான திஷாவை கண்டதும் காதலில் தடுக்கி விழுகிறான் ஹீரோ ஷிவா,அநியாயத்தை தட்டிக்கேட்க கூல் பீர் மாதிரி குடிக்னு பொங்கி,வழிநெடுக வில்லங்களை டார்ச்சர் ஆக் ஷனில் எப்படி தீர்த்துக்கட்டுகிறார் ? தன் பேரன் ஷிவாவுக்காக பாசக்கார பாட்டி பரவை முனியம்மா பண்ற அட்வெண்ஸர் என்ன? உண்மையிலெயே படத்துக்கு மெயின் வில்லன் யார்? என அடுத்தடுத்து மிரட்டலான சஸ்பென்ஸ் தந்து முடியை பிய்த்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.காதலி திஷாவை பாண்டிச்சேரிக்கு தள்ளிட்டுப்போய் மேற்படி மேட்டரை கவனிக்காமல் குடிச்சு மட்டை ஆகிக்கிடக்கும் ஹீரோ,அடுத்த சில சீன் களில் அண்டர்கவர் ஆபரேஷன்ல இறங்கி ஜெயிக்கிறதுல அப்படியொரு Spicy effort தெரியுது.ஓபனிங் ஸாங்கிலிருந்து ஒவ்வொரு காட்சியிலும் ஷிவா ஆக்ஷன் ஹீரோவாக டாப் ஹீரோ ரேஞ்சுக்கு பின்னியெடுக்கிறார்,எம்.எஸ்.பாஸ்கர்,வெண்ணிறஆடை மூர்த்தி,மனோ பாலா,ஆகியோர் எக்ஸ்ட் ரா யுத்ஃபுல்னெஸ் காட்டுவது ஜாலியோ ஜாலி.

கன்னிபையனை தடி வில்லி ரேப் பண்ணப் போற சீனில் தடால்னு வரும் ஹீரோ ஷிவா எப்படி அந்த வில்லியை போட்டுத்தள்ளுகிறார் என்பதை லேசா வக்கிறமான காமெடியாக காட்டிவிடுகிறார்கள்,காய்கறி கடைக்காரர் உலக பொருளாதார நிலவரத்தை சொல்லி உள்ளுர் தாதாவிடம் அழுதுபுலம்புவது,காதலியை மணம் முடிக்க ஒரே பாடலில் ஊரையே வளைக்கும் ஷிவா ஒரு தனி அரசாங்கமாக விஸ்வரூபம் எடுப்பது இவையெல்லாம் படத்தின் சீரியஸ் காமெடி சரவெடிகள்.

குத்தாட்ட மிடில் ஏஜ் குமரி கஸ்தூரியின் குஜால் ஆட்டத்திற்கு இடையில் சென்ஸார்காரங்களை லந்து பண்ணியிதிலிருந்து கினிமாபட்டி கிராமத்தில் சென்செக்ஸ் பற்றி சீரியஸ் செக்ஸ் மேட்டர் மாதிரி எடுத்துவிடுவது வரையில் ஆங்காங்கே டைரக்டரின் டச்.ரொம்ப லாஜிக் பார்த்தால் தமிழ்சினிமாவை யாரும் அனுபவிச்சு ரசிக்க முடியாது என்ற இலை மறை காய் மறை மெஸேஜ் படம் முழுக்க ஓடிட்டே இருக்குது.ப்ரவைபாட்டி வசனமாக பேசி ரம்பம் போடும்போது ஏதோ அழுத்தமான மெஸேஜ் சொல்ல வர்றாங்ககளான்னு டவுட் வருது.பிலிம்மெக்கி ங் வரை கவனம் செலுத்தி டெக்னீஸியன் களிடம் டோஸ் வாங்குகிற Complete ஹீரோவாக ஷிவா ஜொலிக்கிறார். " ஓ மக சியா " பாடல் எழுதியவர்கள் வருங்கால சினிமா கவிஞர்களுக்கு பெரிய சவாளாக இருப்பார்கள் என்பது மட்டும் உறுதி.பொருள் நிறைந்த (?) அந்த பாடலுக்கு நோட்ஸ் போட வேண்டிய அவசியம் இருக்காது.தமிழ்சினிமாவின் அட்டகாசமான Cliches ஐ தரமான ஒளிப்பதிவில் கொண்டுவந்துள்ளார்.கேமராமேன் நீரவ்ஷா.எப்படி தமிழ் சினிமாவுக்கு இசை போடப்படுகிறது என்பதை தனது இசை மூலமாக சொல்லிவிடுகிறார் கண்ணன்.வித்தியாசமான தமிழ்ப்படத்தின் தயாரிப்பாளர் தயாநிதியை தமிழ் கூறும் நல் உலகம் பாராட்டும்.கடைசியில் மொக்க விளக்கத்தோடு டைரக்டர் கார்டு போடுவது வரை காமெடி பீஸாக கலகலக்க வைக்கும் இந்த நையாண்டி தர்பாரின் ரியல் நாயகன் டைரக்டர்தான்.

இந்த தமிழ்ப்படத்தில் சொல்லப்பட்டிருக்கும் Content ஐ இனி எந்த படங்களிலும் உரிய அனுமதியின்றி பயன்படுத்தக்கூடாது.இது FBI  Warning என்று எக்ஸ்ட் ராவாக ஒரு டுமில் கார்டை போட்டிருந்தால் அவ்வளவுதான்,செம கலாட்டா...!





Verdict: தமிழ்ப்படம் - மசாலபடம்