Home
Movie Reviewnaan avan illai 2 movie review
naan avan illai 2 movie review
Cast :
Jeevan, Lakshmi Rai, Sangeetha
Direction :
Selvah
Production :
Jhabak Bros
Music :
D Imman

More Movie Reviews

- Pazhassi Raja - Majestic Imperial
- Adhe Neram Adhe Idam - Limping Love
- Kandaen Kadhalai - Crisp Romance
- Aadhavan - Stereotype Sentiments
- Peranmai - Actionless Adventure
- Aarumugam - Crass Copy
- Thiru Thiru Thuru Thuru - Frivolous Content
- Unnai Pol Oruvan - High Class Message
- Eeram - Moist And Mellow
- Ninaithale Inikkum - Sentimental Classmates
- Kanthaswamy - Lacklustre Treatment
- Pokkisham - Snail Mail
- Eesa - Crude Brutality
- Azhagar Malai - Rural Vendetta
- Malai Malai - Mass Masala
naan avan illai 2 movie review
Nov 27,2009
பேராசைப் பிடித்த 4 பெண்களுக்கு, தீராத விளையாட்டுப் பிள்ளையான ஜீவன் தன் ஸ்டைலில் பாடம் கற்பிக்க சில எல்லைகளை மீறுவதும், ஆனால் அதையும் ஒரு நல்ல விஷயத்துக்காகப் பயன்படுத்துவதும்தான் நான் அவனில்லை - பாகம் 2 கதை.
இரு ஆண்டுகளுக்கு முன் வந்த நான் அவனில்லை ரீமேக்கின் இரண்டாம் பாகம் இந்தப் படம்.
வைரங்கள் குவிக்க, வெளிநாடுகளில் சொத்து சேர்க்க, கணவனை அடிமைப்படுத்த... இப்படி மோசமான பேராசை கொண்ட ஹேமமாலினி, ஸ்வேதா மேனன், லட்சுமிராய் மற்றும் ரக்ஷனா என 4 பெண்களை ஏமாற்றுகிறார் கில்லாடி ஆசாமியான ஜீவன்.
ஆனால் இந்த நான்கு மோசடிகளுமே தான் செய்ததல்ல என்று கூறிவிட்டு தப்பிவிடுகிறான். அது எப்படி என்பதுதான் நான் அவனில்லை -2.
5 நாயகிகள் ஒரு ஹீரோ என்ற பார்முலா எப்படியும் கைகொடுத்துவிடும் என்ற நம்பிக்கையில் மீண்டும் செல்வா எடுத்துள்ள படம் இது.
அவர் நம்பிக்கை கிட்டத்தட்ட வீண்போகவில்லை என்றுதான் கூறவேண்டும். திரையை ஆக்கிரமிக்கும் நாயகிகளின் கவர்ச்சிக் காட்சிகளை வைத்த கண் வாங்காமல் பார்க்கும் ரசிகர்கள், சுமாரான காட்சியாக இருந்தாலும்கூட ஜாலியாக கமெண்ட் அடித்தபடி சீட்டிலேயே அமர்ந்திருப்பது அதிசயம்தான்.
டெய்லர் மேட் ரோல் ஜீவனுக்கு. ரொம்ப அனாயாசமாக ஊதித் தள்ளுகிறார். குறிப்பாக ரக்ஷனாவிடமும், லட்சுமிராயிடமும் அவர் போடும் வேடங்களும், செய்யும் தில்லுமுல்லுகளும் ரசிக்க வைக்கின்றன.
ஜீவனுக்கு பக்காவான பக்க வாத்தியம் மயில்சாமி. கலக்குகிறார் மனிதர்.
ஐந்து நாயகிகளில் முதலிடம் ஹேமமாலினிக்கு. ஜூனியர் நமீதா!
அடுத்த இடத்தை ரக்ஷனாவுக்கு தரலாம். லட்சுமிராயிடம் கவர்ச்சி மிஸ்ஸிங். கவர்ச்சி என நினைத்து அவர் வரும் கோலத்தைப் பார்த்தால் பரிதாபமாக உள்ளது.
சங்கீதா ஈழத் தமிழ்ப் பெண்ணாக வருகிறார். அனுதாப ஓட்டுக்காக படைக்கப்பட்ட பாத்திரம்.
பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசை பற்றி இயக்குநரும் கவலைப்படவில்லை... இசையமைப்பாளரும் கவலைப்படவில்லை. நமக்கு மட்டும் என்ன வந்தது!
இவ்வளவு குற்றங்கள், மோசடிகளைச் செய்த ஒருவர், தப்பிக்க கையாளும் டெக்னிக் மகா குழந்தைத்தனமானது. எதற்கெடுத்தாலும் நான் அவனில்லை என்று சொல்லிக் கொண்டே இருந்தால், சட்டம் விட்டுவிடுமா...
இருந்தாலும் காட்சிகள் நகர்கிற வேகத்தில் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் ரசித்துவிட்டுத் திரும்புகிறது ரசிகர் கூட்டம்!
-புலிகேசி
Verdict: Average

Comments
-
Posted by rajan2009-12-22 10:59பின்னணி இசை பற்றி இயக்குநரும் கவலைப்படவில்லை... இசையமைப்பாளரும் கவலைப்படவில்லை. நமக்கு மட்டும் என்ன வந்தது! ஹஹஹா புலிகேசி கலக்குரார்.

Post Your Comments