Home Movie Reviewஜக்குபாய்- விமர்சனம்
Illinois Institute Of Technology
  

ஜக்குபாய்- விமர்சனம்

ஜக்குபாய்- விமர்சனம்

Cast :
Sarathkumar, Goundamani, Shriya
Direction :
K S Ravikumar
Production :
Radan - Zee
Music :
Rafee
  • The Critics
  • Sivaji Tv Users
  • Rate this Movie
1.5
1
15 Rating
stars stars stars stars stars

ஜக்குபாய்- விமர்சனம்

Jan 30,2010

ரஜினி ரொம்ப தெளிவான மனிதர்தான்... இல்லாவிட்டால் 7 ஆண்டுகளுக்கு முன்பே இந்த ஜக்குபாயை நிராகரித்திருப்பாரா...

சென்னையை கிரிமினல்கள் இல்லாத நகரமாக்க எந்த அளவு மோசமான நடவடிக்கை எடுக்கவும் தயங்காத கண்டிப்பான போலீஸ் அதிகாரி சரத் குமார். ஆஸ்திரேலியாவுக்கு ஒரு கேஸ் விஷயமாகப் போகும்போது ஸ்ரிஷாவை காதலிக்கிறார். பின்னர் இருவரும் பிரிந்து விடுகிறார்கள்.

ரொம்ப நாள் கழித்து முன்னாள் காதலி ஆஸ்திரேலிய கார் விபத்தில் செத்துப் போனது தெரிய வருகிறது. சாகும்போது அவர் ஒரு உயில் எழுதி வைக்கிறார். அதில் அவருக்கு மோனிஷா என்ற பெயரில் ஒரு அழகான - கோடீஸ்வர மகள் (ஸ்ரேயா) இருப்பதையும் குறிப்பிட்டு வைக்கிறார்.

ஜெகன்னாதனின் பழைய எதிரி அமீத் அன்சாரியால் மோனிஷாவின் உயிருக்கே ஆபத்து என்பதை அறிந்து, அந்த போராபத்திலிருந்து மகளைக் காப்பாற்ற ஆஸ்திரேலிய எம்ஐபி கவுண்டமணி துணையுடன் புறப்படுகிறார்.

இக்கட்டிலிருந்து அவர் மகளைக் காப்பாற்றுவது மீதிக் கதை.

சரத்குமார் உண்மையிலேயே இந்த வேடத்துக்குப் பொருத்தமாகத்தான் இருக்கிறார். நன்றாகவும் நடித்துள்ளார்.

இன்னொரு ஹீரோ கவுண்டமணி. ஆனால் சொதப்பலான திரைக்கதையால், கவுண்டரின் அசத்தலான காமெடி காணாமல் போகிறது.

ஸ்ரேயா இதில் ஆங்காங்கே நடிக்கிறார். ஸ்ரிஷாவுக்கு நடிப்பு அவ்வளவாக வரவில்லை.

இருபது வருடங்களுக்கு முந்தைய சென்டிமெண்ட் காட்சிகளை வைத்து படுத்துவதை ரவிக்குமார் எப்போதுதான் நிறுத்தப் போகிறாரோ தெரியவில்லை.

அதுவும் கோர்வையாகவோ, சுவாரஸ்யமாகவோ இல்லை என்பதால் கதையுடன் ஒன்ற முடியவில்லை.

ஆர்டி ராஜசேகரின் கேமரா செய்த ஜாலத்தை, ரபியின் இசை செய்யத் தவறியிருக்கிறது. குறிப்பாக அந்த ஷாப்பிங் மாலில் சரத் போடும் அட்டகாசமான சண்டையில் விளையாடியுள்ளது கேமரா.

மற்றபடி சொல்லிக் கொள்கிற மாதிரி எதுவும் இல்லை. இவ்வளவு அவகாசம் எடுத்த ரவிக்குமார், கைவசம் உள்ள மசாலாவை வைத்து சுவையான விருந்தே தந்திருக்கலாம்... என்ன செய்வது..

படம் பார்த்துவிட்டு வெளியில் வரும் ரசிகர்கள் சொல்வதைத்தான் நாமும் சொல்ல வேண்டும்...

ஜக்குபாய்... மக்குபாய்தான்!

-புலிகேசி

Verdict: Average