Snehan - சினேகன் கவிதைகள் - தேடல்
சினேகன் கவிதைகள் - தேடல்

அறிந்தும் அறியாமலும்
அறியாமல் அறிந்தும்...
சில நிமிடங்களை
மணிகளை,நாட்களை
பொருட்படுத்தாமல்
விட்டு விட்டேன்...
தேடி வந்த ஒன்று
தென் படாதபோது...
அந்த நிமிடத்திலோ
நாட்களிலோ
சிக்கி இருக்குமோ
என்ற பயம் தான்...
தேடுதல் மட்டும்
முடிவுக்கு வருவதில்லை...
தெரிந்தோ,தெரியாமலோ
தேடிக்கொண்டிருப்பதே
வாழ்க்கையாகி விட்டது...
குறிப்பாக
ஒன்றைத் தேடினால்...
தொலைந்ததையும்
கிடைப்பதையும்
உறுதி செய்து விடலாம்...
ஒவ்வொரு பொழுதில்
ஒவ்வொன்றைத் தேடினேன்...
எந்தப் பொழுதில்
எது தொலைந்ததோ ?
எந்தப்பொழுதில்
எது கிடைக்குமோ ?...
(தொடரும்)...


