Seeman - சீறும் சீமான் பதில்கள்: யார் மேல் அதிகக் கோபம்?
சீறும் சீமான் பதில்கள்: யார் மேல் அதிகக் கோபம்?
1

அபு, கலிபோர்னியா
கே: ஒரு குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்த உங்களை பெரியாரின் கொள்கை கோட்பாடுகள் எப்படி கவர்ந்தது?
பதில்: தந்தையின் (பெரியார்) கொள்கை அறிமுகத்திற்கு முன்பே நான் கண்ட சாதிய அடர்த்தி, கட்டுமானம், மூடப்பழக்க வழக்கங்கள் என்னை உறுத்தியது. படித்தவரும் சரி...பாமரனும் சரி இந்த விஷயத்தில் ரொம்ப எரிச்சலை ஊட்டினார்கள் என்னை யோசிக்கத் தூண்டினார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
நடைமுறை சான்று ஒன்று : ஊரில் "அய்யனார் சாமி " இருக்கும் அது ஊர் எல்லையில் ஊர் காவலுக்கு பெரிய அருவாலோடு நிற்கும்.அதையே யாராவது திருடிட்டு போயிடுவாங்கள் என்று...வீட்டிற்க்கு ஒரு ஆள் வீதம் அதற்கு காவல் காக்க வேண்டியுள்ளது. இது எப்படி? தன்னை தானே காத்துக்க முடியாத தெய்வம் நம்ம ஊரை எப்படி காக்குனு? கேள்வி எழுது இது போன்ற சமூக குப்பைகளை மனதில் புடம் போட்டுக் கொண்டே கல்லூரி காலங்களில் விடை தேடியபோது...ஒரு மிகப் பெரிய பாதையை தந்தை பெரியார் போட்டுள்ளதை கண்டேன்...அதன் வழி நடக்கிறேன்.
தமிழ்ச்செல்வன், கனடா
கே: கலப்பற்ற தமிழ்ப் பேச்சு வரவேற்கத்தக்கது. உங்களுக்கு மாற்று மொழி கற்பதில் முரண்பாடு உண்டா?
பதில்: உலகத்தில் எந்த மொழி தெரிந்தாலும், சொந்த மொழி தெரியாதவன் முட்டாள். ஆங்கிலம், இந்தி படித்தால் வட இந்தியாவிலும் பிற நாடுகளிலும் வேலை கிடைக்கும் என்றால் வசதியாக வாழலாம் என்றால் படியுங்கள், பாராட்டுகிறோம். அதற்கான வசதி வாய்ப்புகளை செய்து தருகிறோம். உலகத்தில் எந்த மொழியையும் படியுங்கள் நீங்கள் வாழ்வதற்கு. சொந்த மொழி (அதாவது தாய்மொழி) படியுங்கள் நம் இனம் வாழ்வதற்கு. இது தான் நாங்கள் சொல்வது.
தமிழ்நேசன், புதுவை
கே: தமிழ் இன உணர்வாளர், தமிழீழப் போராளி என்ற முகங்கள் உங்களின் திரையுலக பயணத்திற்கு தடையாக உள்ளதா?
பதில்: இங்கு என்ன பிரச்சனை என்றால் உண்மையாக உணர்வோடு வாழ்வது தான். இரண்டு கூர்மையான கத்தி என் விலா எலும்பை இருபுறமும் பாய வருகிறது.
ஒன்று: பகுத்தறிவாளனாக,பெரியாரின் கொள்கை பேரனாக இருப்பது ஒரு சிக்கல்.
இரண்டு: என் மொழி, என் இனம் என்று பேசினால் மிகப்பெரிய ஆபத்தானவன் போல கருதுவது. அது போக தமிழீழ விடுதலையை முன்னெடுப்பது,குறிப்பாக என் அண்ணன் பிரபாகரனை ஆதரிப்பது. இவை என் பேச்சு, செயல்பாடாக இருப்பதால் பெரிய பின்னடைவு இருப்பது உண்மை. கடவுள் நம்பிக்கையால் தேசத்தின் பொருளாதாரம் தெருவுக்குள் சீரழிகிறது. பின்னடைவால் பயப்பட தேவையில்லை. சினிமா தொழிலையே விட்டு விவசாயம் பார்த்தாலும் என் இன உணர்வை, கொள்கையையும் விட மாட்டேன். சாவது உறுதி! அது என் இனத்திற்காக என்றால் அதில் எனக்குப் பெருமையே!
இளங்கோ, சென்னை
கே: காங்கிரஸின் வெற்றி தோல்வி பற்றி என்ன கருதுகிறீர்கள்?
பதில்: எந்த அரசியல் கட்சி ஆண்ட போதும் என் இனம் வீழ சிக்கல் இல்லை. ஆனால் காங்கிரஸ் தலைமை மட்டுமே நமது தொப்புள் கொடி உறவுகளுக்கான ஈழத் தமிழினத்தை பூண்டோடு ஒழித்தழிக்கும் முழுமையை நடத்திக் கொண்டு இருக்கிறது. காரணம் அதிகார வர்க்கமே...இந்த அக்கிரமக்காரர்களுக்கு எதிர்நிலையை காட்டவே காங்கிரஸை எதிர்த்தோம். இது எனக்கான கட்டளை. கடமை களமாடியதில் பாதி வெற்றி கண்டோம்.
முத்துக்குமார், நார்வே
கே: யார் மேல் அதிகக் கோபம்? தமிழர்கள் மீதா? சிங்கள அரசின் மீதா?
பதில்: என் இனத்தை அங்கையும் காட்டிக் கொடுக்கிறான். இங்கையும் காட்டிக் கொடுக்கிறான். எதிரியை விட துரோகி மீது தான் கோபம். சிங்களவனை விட எனக்கு நம் இனத்தின் மீதே அளவு கடந்த கோபம்.
செல்வராஜன், கலிபோர்னியா
கே: 'தம்பி' படத்திற்கு பிறகு புரட்சிகரமான கருத்துக்களை கொண்ட படங்களை நீங்கள் எடுக்கவில்லையே... ஏன்?
பதில்: நிஜத்திலும் திரையிலும் ஒரு முகமே காட்டுவதால் மாற்றங்களை விரும்பாத மனிதனாகி விடுவோம். முற்போக்கான வடிவமே என் முத்திரை. அதை என் திரைப்படங்களின் வாயிலில் சொல்ல முன்னெடுப்பேன். அவ்வளவே.
வேலவன், திருச்சி
கே: சீமானின் 'கோபம்' என்னானது?
பதில்: விரைவில் கொப்பளிக்கும். புது முகங்களை வைத்து எடுப்பேன். தீரா கோபத்தை பதிவு செய்து.... என் எண்ணம், சிந்தனை யாவைக்கும் சிறிது ஆறுதலான மாறுதல் தேடுவேன்.
ஹூமயூன், சென்னை
கே: அஜித் - தல படம் பண்ண போறதாக செய்திகள் வந்ததே?
பதில்: அடுத்தது தானு அண்ணனுக்கு படம் பண்றோம். அது 'பகலவன்', 'கோபம்' இரண்டில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம். பகலவனுக்கு பெரிய நட்சத்திரம் தேவைப்படுகிறது. அஜித், விஷால், கார்த்தினு மூவரிடமும் அனுகுகிறோம். பார்ப்போம் எப்படி அமையும் என்று...
பாஸ்கரன், சிகாகோ
கே: பிரபாகரன் விஷயத்தில் தமிழர்களின் நிலை பற்றி என்ன கருதுகிறீர்கள்?
பதில்: அறிவார்ந்த திறமைமிக்க ஒரு தலைமை கிடைத்தும் நாம் அவரை முழுமையாய் பயன்படுத்தவில்லை. பிரபாகரன் ஒரு தீவிரவாதி என்றும், பிழைக்கப் போன இடத்தில் நாடு கேட்டு சண்டை போடுகிறான் என்றும் பைத்தியகாரர்கள் சிலர் சொல்கிறார்கள். இவரைப் போல் வீரமிகுந்த, அறிவு செறிந்த, தன்னலமில்லா ஒரு தலைவனை வேறு எங்கேனும் காட்டுங்கள் பார்க்கலாம்? வரலாறு தெரியாது சில எட்டப்பர்களுக்கு..!
கதிர்காமன், லண்டன்
கே: தலைவர் பிரபாகரனை எங்கே, எப்போது, எத்தனை முறை சந்தித்து இருக்கிறீர்கள்?
பதில்: சந்தித்திருக்கிறேன். எப்போது, எப்படி என்று விரிவாக சொல்ல இயலாது. நாட்டில் இல்லை. அவர் வாழும் தமிழீல மண்ணில் சந்தித்தேன். உலகெங்கிலும் வேர் பரப்பி வாழும் என் தமிழின மக்களுக்கு சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
(தொடரும்...)

பாஸ்கரன், சிகாகோகே: பிரபாகரன் விஷயத்தில் தமிழர்களின் நிலை பற்றி என்ன கருதுகிறீர்கள்?